amazon

செவ்வாய், செப்டம்பர் 09, 2014

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,

ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........

படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ....

3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )

ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...

சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற
உபயோகிக்கிறோம்...

மாறுவோம்...
பிறரை மாற்றுவோம்...

கருத்துரையிடுக